Street Dogs
We must control the street dogs, To day some dogs caught a goat and killed to eat. the peoples of the coimbatore Kurichi afraid and hangouts.
குறிச்சி:குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்1 அருகே, மூன்று ஆடுகளை, 30க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்துக் கொன்றதால், அப்பகுதியில் வசிப்போர் பீதியடைந்துள்ளனர்.
சுந்தராபுரத்தை அடுத்த குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்1 வணிக வளாகத்தின் பின்புறம் (நேதாஜி நகர் எதிரே) வசிப்பவர் ஜீவானந்தம், 55; விவசாயி.
இவர், மூன்று செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். இரவு நேரத்தில், வீட்டின் முன், ஆடுகளை அடைத்து விடுவார்.
நேற்று அதிகாலை 3:00 மணியளவில், ஆடுகள் கத்துவதை கண்ட ஜீவானந்தம், வீட்டின் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது, 30க்கும் மேற்பட்ட நாய்கள், ஆடுகளை கட்டியிருந்த கயிற்றை துண்டாக்கி, ஆடுகளை இழுத்துச் செல்ல முற்படுவதை கண்டார். நாய்களை விரட்ட முயன்றபோது, அவரை கடிக்க முற்பட்டன. இருப்பினும், முடிந்த வரை போராடிய ஜீவானந்தத்துக்கு, தோல்விதான் ஏற்பட்டது. நாய்கள், மூன்று ஆடுகளையும், கடித்து, குதறி இழுத்துச் சென்றன. பின்னர், குழுவாக பிரிந்து, ருசி பார்த்தன.அதிகாலை நேரத்தில் அவ்வழியே நடைபயிற்சி மேற்கொண்டவர்கள், இக்கோரத்தை கண்டு திடுக்கிட்டனர். தொடர்ந்து காலை 8:00 மணி வரை, நாய்கள் ஆட்டின் இறைச்சியை ருசி பார்த்த வண்ணம் இருந்தன. அப்போது அங்கு வந்த மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், நாய்களை விரட்டி, மீதமிருந்த இறைச்சிகளை தூக்கிச் சென்றனர்.ஜீவானந்தம் கூறுகையில்,""இப்பகுதியில், ஏராளமான நாய்கள் உள்ளன. இதுவரை 12க்கும் மேற்பட்ட ஆடுகள், நாய்களால் கொல்லப்பட்டுள்ளன. ரத்த வாடைக்கு பழகிப்போன இவற்றால், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தைகளை வெளியே விடவே, அச்சமாக உள்ளது. மக்களின் பாதுகாப்பை கருதி, மாநகராட்சி நிர்வாகம், நாய்களை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

No comments:
Post a Comment